இந்திய ஒற்றுமை பயணத்தின் ஜம்மு-காஷ்மீர் ஒருங்கிணைப்பாளராக ஜி.ஏ. மிர் நியமனம்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் ஜம்மு-காஷ்மீர் ஒருங்கிணைப்பாளராக ஜி.ஏ.மிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஒற்றுமை பயணத்தின் ஜம்மு-காஷ்மீர் ஒருங்கிணைப்பாளராக ஜி.ஏ. மிர் நியமனம்
Published on

ஜம்மு,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆளும்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் நடைபயணத்தை நடத்தி வருகிறார்.

ராகுல் காந்தியின் நடைபயணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் ஜம்மு-காஷ்மீரில் நுழைய உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் ஜம்மு-காஷ்மீர் பொறுப்பாளரும், எம்பியுமான ரஜினி பாட்டீல் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், இந்திய ஒற்றுமை பயணத்தின் ஜம்மு-காஷ்மீர் ஒருங்கிணைப்பாளராக ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜி.ஏ. மிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்திய ஒற்றுமை பயணத்தின் ஜம்மு-காஷ்மீர் ஒருங்கிணைப்பாளராக ஜி.ஏ. மிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் நடை பயணத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய ஏற்பாடுகள், செயல்பாடுகள் மற்றும் பிற தேவையான நடவடிக்கைகளை அவர் கவனிப்பார். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com