கேரளம் முன்னாள் டி.ஜி.பி. கவுன்சிலர் பதவியில் இருந்து விலகல்

திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியது.
கேரளம் முன்னாள் டி.ஜி.பி. கவுன்சிலர் பதவியில் இருந்து விலகல்
Published on: 

கொல்லம்,

கேரளம் ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. ஆர்.ஸ்ரீலேகா, கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் சாஸ்தமங்கலம் வார்டில் பா.ஜனதா சார்பில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியது.

ஸ்ரீலேகா மேயர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வி.வி.ராஜேஷ் மேயர் ஆனார். அதனால் ஸ்ரீலேகா அதிருப்தியாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தனது கவுன்சிலர் பதவியை ஸ்ரீலேகா ராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட அசவுகரியங்களால் பதவி விலகுவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாக மேயர் ராஜேஷ் நிருபர்களிடம் கூறினார். இதுகுறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். ஸ்ரீலேகா ராஜினாமாவால், 101 பேர் கொண்ட மாநகராட்சியில் பா.ஜனதாவின் பலம் 51-ல் இருந்து 50 ஆக குறைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com