

போபால்,
நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான கமல்நாத் இன்று போபாலில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.