

புதுடெல்லி,
மணிப்பூரில் முதல் மந்திரி பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரின் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த கோவிந்தாஸ் கொந்தவுஜம் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளார். அவர் முதல் மந்திரி பைரன் சிங் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.