

புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹாபால் மிஸ்ரா, கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக இடைநீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. அவருடைய மகன் வினய் குமார் மிஸ்ரா, சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் சேர்ந்தார். துவாரகா தொகுதியில் லால்பகதூர் சாஸ்திரியின் பேரனை எதிர்த்து ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததால், மஹாபால் மிஸ்ரா நீக்கப்பட்டதாக தெரிகிறது.