முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ரத்த ஓட்டம் சீராக உள்ளது - ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ரத்த ஓட்டம் சீராக உள்ளதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ரத்த ஓட்டம் சீராக உள்ளது - ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல்
Published on

புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மூளையில் உறைந்த ரத்த கட்டியை அகற்ற டெல்லியில் உள்ள ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் நடந்தது. மேலும் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. அவர் கோமா நிலைக்கு சென்றதால் வென்டிலேட்டர் உதவியுடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலையில் நேற்று முன்தினம் லேசான முன்னேற்றம் ஏற்பட்டது.

பிரணாப் முகர்ஜிக்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும், உடல்நிலை அப்படியே இருந்து வருவதாகவும், முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை கண்காணித்து டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருவதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com