பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு


தினத்தந்தி 5 Jan 2026 3:35 PM IST (Updated: 5 Jan 2026 3:43 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவரான நிதின் நபின், முரளி மனோகர் ஜோஷியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.

புதுடெல்லி,

பா.ஜ.க.வின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவரான நிதின் நபின் ஆகியோர், முரளி மனோகர் ஜோஷியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வீட்டுக்கு சென்று இனிப்பு வழங்கி, பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றனர்.

இதன்பின்னர் இருவரும் அவருடன் சிறிது நேரம் உரையாடினர். இதேபோன்று அவருடைய பிறந்த நாளுக்கு கட்சியின் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மத்தியில், பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் பதவிக்கு நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டதும், மரியாதை நிமித்தம், கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

1 More update

Next Story