முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி


முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி
x

சிகிச்சை முடிந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு,

முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா (வயது 92) இன்று உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரான அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவர், சிகிச்சை முடிந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story