மேற்கு வங்காள அரசியல் சாணக்கியர் முகுல் ராயின் அரசியல் பயணம்

முகுல் ராயின் அரசியல் சர்ச்சைகள் நிறைந்த பயணமாகவே இருந்தது.
மேற்கு வங்காள அரசியல் சாணக்கியர் முகுல் ராயின் அரசியல் பயணம்
Published on

கொல்கத்தா,

மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய உதவியாளராகவும், திரிணாமுல் காங்கிரசின் "சாணக்கியர்" என்றும் அழைக்கப்பட்ட முகுல் ராய் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய ரெயில்வே மந்திரியாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் (இருமுறை) பணியாற்றியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நிலை சரி இல்லாத காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சமீபத்தில் மூளை சம்பந்தப்பட்ட டிமென்ஷியா என்ற நோயால் பாதிக்கப்பட்ட அவர், கோமா நிலைக்குச் சென்றார். இந்த நிலையில், கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முகுல் ராயிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்ததாக அவரது மகன் சுப்ரான்ஷு ராய் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள அரசியல் சாணக்கியர் என்றழைக்கப்படும் முகுல் ராய், காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளில் பணியாற்றியுள்ளார்.

1998 -ம் ஆண்டு காங்கிரசில் இருந்து பிரிந்து திரிணமுல் காங்கிரசை மம்தா பானர்ஜி உருவாக்கியபோது, அவருடன் காங்கிரசில் இருந்து வெளியேறினார்.

பின்னர், மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2021-ல் பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகுல் ராய், பின்னர் மீண்டும் திரிணமுல் காங்கிரசில் இணைந்ததால் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தனது பதவியை இழந்தார். பின்னர் உடல் நிலை காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகினார். முகுல் ராய் அவர்களின் அரசியல் சர்ச்சைகள் நிறைந்த பயணமாகவே இருந்தது.

மிக முக்கியமான பிரச்சினைகளைச் சிறந்த முறையில் தீர்ப்பதில் வல்லவர். மன்மோகன் சிங் தலைமையிலான இரண்டாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA-2) அரசில், மம்தா பானர்ஜியின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (TMC) 2009 முதல் 2012 வரை ஒரு மிக முக்கியத் அரசியல் கட்சி தலைவர் ஆகவும் இருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com