இலங்கை முன்னாள் எம்.பி. திலீபன் கொச்சியில் கைது


இலங்கை முன்னாள் எம்.பி. திலீபன் கொச்சியில் கைது
x

இலங்கை முன்னாள் எம்.பி. திலீபனை கியூ பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கொச்சி,

போலியான முகவரி கொடுத்து பாஸ்போர்ட் எடுத்த குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் எம்.பி. திலீபனை கியூ பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

2019ம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போலி முகவரியைக் கொடுத்து மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்ற வழக்கில், இலங்கையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னாள் எம்.பி. திலீபன் மீது இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த 11ம் தேதி கொச்சி விமான நிலையம் வந்த திலீபனை குடியுரிமை அதிகாரிகள் பிடித்து, மதுரை க்யூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

1 More update

Next Story