தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டேவுக்கு பத்ம ஸ்ரீ விருது: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்

இந்த ஆண்டிற்கு 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண், 113 பத்மஸ்ரீ உள்ளிட்ட 131 பத்ம விருதுகளை வழங்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டேவுக்கு பத்ம ஸ்ரீ விருது: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
Published on

புதுடெல்லி,

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடை பெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, 66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்குகிறார். அதாவது 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண் மற்றும் 58 பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி வழங்க உள்ளார்.

விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டிற்கு 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண், 113 பத்மஸ்ரீ உள்ளிட்ட 131 பத்ம விருதுகளை வழங்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், மருத்துவருமான டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்களுக்கு மருத்துவத் துறையில் ஆற்றிய வாழ்நாள் சாதனைக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு, புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடமிருந்து இந்த உயரிய விருதை அவர் பெற்றுக் கொண்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com