முன்னாள் மத்திய மந்திரி ராஜசேகரன் உடல்நல குறைவால் மரணம்

முன்னாள் மத்திய மந்திரி ராஜசேகரன் உடல்நல குறைவால் மரணம் அடைந்து உள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி ராஜசேகரன் உடல்நல குறைவால் மரணம்
Published on

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி எம்.வி. ராஜசேகரன் உடல்நல குறைவால் இன்று மரணம் அடைந்து உள்ளார். அவருக்கு வயது 91.

கர்நாடகாவில் ராமநகரா நகரின் மரலவாடி பகுதியில் கடந்த 1928ம் ஆண்டு செப்டம்பர் 12ந்தேதி பிறந்த எம்.வி. ராஜசேகரன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

வேளாண் வல்லுனர் மற்றும் கிராம வளர்ச்சி ஆலோசகராக இருந்த இவர், எம்.எல்.சி. மற்றும் எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். முன்னாள் முதல் மந்திரி நிஜலிங்கப்பாவின் மருமகனான ராஜசேகரன் கிராம வளர்ச்சிக்கான கல்வி அமைப்பு ஒன்றை அமைத்த பெருமைக்கு உரியவர்.

கனகபுரா மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்த அவர், மத்திய அரசின் திட்ட மற்றும் புள்ளியியல் துறையின் இணை மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், அவர் உடல்நல குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்து உள்ளார்.

அவருக்கு கிரிஜா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com