

மும்பை,
உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான இவர், ராணுவ மந்திரியாகவும் இருந்து உள்ளார். 80 வயதான முலாயம் சிங் யாதவுக்கு வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவருக்கு நெருங்கிய ஒருவர் கூறுகையில், முலாயம் சிங் யாதவ் கடந்த 3 நாட்களுக்கு முன் மும்பை வந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்ததாக தெரிவித்தார்.
சிகிச்சை முடிந்து நேற்று மதியம் ஆஸ்பத்திரியில் இருந்து முலாயம் சிங் வீடு திரும்பினார்.