உத்தரகாண்ட் முன்னாள் முதல்-மந்திரி காலமானார்

புவன் சந்திர கந்தூரி இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார்.
உத்தரகாண்ட் முன்னாள் முதல்-மந்திரி காலமானார்
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் முன்னாள் முதல்-மந்திரி புவன் சந்திர கந்தூரி (வயது 91). பாஜக மூத்த தலைவரான இவர் 2007 முதல் 2009 ஆண்டு வரையும், 2011 முதல் 2012ம் ஆண்டு வரையும் உத்தரகாண்ட் முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார். அரசியலில் நுழைவதற்கு முன்பு புவன் சந்திர கந்தூரி இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், 91 வயதான புவன் சந்திர காந்தூரி வயது முதிர்வு, உடல்நலக்குறைவு உள்பட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புவன் சந்திர காந்தூரி சிகிச்சை பலனின்றி இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com