ஹம்பியில் கல்தூணை கீழே தள்ளும் விஷமிகளை போலீஸ் கைது செய்தது

உலக பாரம்பரிய சின்னமான ஹம்பியில் கல்தூணை கீழே தள்ளும் விஷமிகளை போலீஸ் கைது செய்தது.
ஹம்பியில் கல்தூணை கீழே தள்ளும் விஷமிகளை போலீஸ் கைது செய்தது
Published on

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே தாலுகாவில் உலக பாரம்பரிய சின்னமாக ஹம்பி திகழ்கிறது. இங்கு பழங்கால கோவில்கள், மண்டபங்கள், கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட கல்தூண்கள் உள்ளன. ஹம்பியை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து உள்ளது. சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை 2019-ம் ஆண்டு பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் உலகளவில் ஹம்பி 2-வது இடத்தை பிடித்தது.

ஹம்பிக்கு கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். ஹம்பி ஒரு திறந்தவெளி மியூசியம் என்றும் அழைக்கப்படுகிறது. .

ஹம்பியின் அருமை பெருமைகளை அறியாத விஷமிகள், அங்குள்ள விஷ்ணு கோவிலின் பின்புறம் நின்று கொண்டிருந்த கல்தூண் ஒன்றை கீழே தள்ளும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ஹம்பி பகுதி மக்கள் வாலிபர்களை கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலைமறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே, ஹம்பியில் கல்தூணை மர்மநபர்கள் கீழே தள்ளும் வீடியோ புதியது அல்ல. அது 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பல்லாரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் ரங்கராஜன் தலைமையிலான போலீசார் ஹம்பிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். பின்னர், சம்பவம் குறித்து ஹம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். அத்துடன் அந்த விஷமிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் விஷமிகளை வலைவீசி தேடினர். இப்போது இவ்விவகாரத்தில் போலீசார் 4 இளைஞர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் ராஜ்பாபு, ராஜா, ராஜேஷ் சவுத்ரி மற்றும் ஆயுஷ் சாஹு என தெரியவந்துள்ளது. விளையாட்டாக தூண்களைச் சேதப்படுத்தியுள்ளனர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com