சத்தீஷ்காரில் கண்ணிவெடி தாக்குதலில் 4 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பலி

சத்தீஷ்காரில் கண்ணிவெடி தாக்குதலில் 4 சி.ஆர்.பி.எப். வீரர்கள் இன்று கொல்லப்பட்டனர்.
சத்தீஷ்காரில் கண்ணிவெடி தாக்குதலில் 4 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பலி
Published on

ராய்பூர்,

சத்தீஷ்காரில் பிஜாப்பூர் மாவட்டத்தில் முர்டாண்டா முகாமில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் அந்த பகுதியை தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் பணிக்காக சென்றிருந்தனர்.

முகாமில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் கண்ணிவெடி தாக்குதல் பாதுகாப்பு வாகனத்தில் சென்று கொண்டிருந்த வீரர்களை நக்சலைட்டுகள் சக்தி வாய்ந்த நில கண்ணிவெடி கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com