ராஜஸ்தான் : ஜோத்பூரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - 16 பேர் காயம்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் : ஜோத்பூரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - 16 பேர் காயம்
Published on

ஜோத்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள கிர்த்தி நகர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், விபத்தில் காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சிலிண்டர்களை நிரப்பும் போது இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிலிண்டர் வெடித்ததை அடுத்து வீடு தீப்பிடித்து அதன் ஒரு பகுதி இடிந்து விழுந்தது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் வாகனமும் சிலிண்டர் வெடித்ததில் சேதமடைந்தன.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா கூறும்போது, இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு, இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com