

சில்வசா,
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டையூ மற்றும் டாமன் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்டம் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி.
இந்நிலையில், அம்மாவட்டத்தில் உள்ள சில்வசா நகரில் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு கியாஸ் சிலிண்டர் குடோன் செயல்பட்டு வந்தது. இந்த குடோனில் சிலிண்டருக்கு நியூட்ரியன் கியாஸ் நிரப்பிம் பணிகளும் நடைபெற்று வந்தது.
இந்த குடோனில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் குடோனில் பணியாற்றிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.