என்கவுண்ட்டரில் 4 பேர் சுட்டுக் கொலை: 13-ந் தேதி வரை உடல்களை பாதுகாக்க தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவு

என்கவுண்ட்டரில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 13-ந் தேதி வரை அவர்களின் உடல்களை பாதுகாக்க தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
என்கவுண்ட்டரில் 4 பேர் சுட்டுக் கொலை: 13-ந் தேதி வரை உடல்களை பாதுகாக்க தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவு
Published on

ஐதராபாத்,

ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேர் கடந்த 6-ந் தேதி போலீஸ் என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களுடைய உடல்கள் மகபூப்நகர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த பிரச்சினை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தெலுங்கானா ஐகோர்ட்டு, 4 பேரின் உடல்களையும் 9-ந் தேதி (நேற்று) இரவு 8 மணி வரை பாதுகாத்து வைக்குமாறு உத்தரவிட்டது.

இந்த நிலையில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.பிரசாத் நேற்று தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆர்.எஸ்.சவுகான் தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி, போலீஸ் என்கவுண்ட்டர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்கள் நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வர இருக்கும் தகவலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்தும், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறிமுறையின் படி போலீஸ் என்கவுண்ட்டர் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட இருப்பதை கருத்தில் கொண்டும், 4 பேரின் உடல்களையும் வருகிற 13-ந் தேதி வரை பாதுகாத்து வைக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மெகபூப்நகர் அரசு ஆஸ்பத்திரியில் போதிய வசதி இல்லை என்றால் 4 உடல்களையும் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com