

அமராவதி,
ஆந்திராவில் 3 குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்ற தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாநிலம் அக்ரஹரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவியும், கோஷிதா (வயது 13), புஜிதா (வயது 11), லோகிதா ஸ்ரீ (வயது 8) என 3 மகள்களும் இருந்தனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்குமுன் சுதாகரின் மனைவி அவரை விட்டு பிரிந்து தனியே சென்றுவிட்டார். இதனால், சுதாகர் தனது 3 மகள்களுடன் தனியே வசித்து வந்தார்.
இந்நிலையில், மனைவி பிரிந்து சென்றதால் மிகுந்த விரக்தியடைந்த சுதாகர் நேற்று இரவு தனது மகள்களுக்கும் விஷம் கலந்த ஜூஸ் கொடுத்துள்ளார். அந்த ஜூஸ் குடிந்த 3 மகள்களும் உடனடியாக உயிரிழந்தனர். இதையடுத்து, சுதாகர் வீட்டிற்கு அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், இன்று காலை விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி பிரிந்து சென்றதால் 3 மகள்களையும் கொன்று சுதாகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.