பள்ளிக்கூடத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 4 மாணவிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு

பள்ளிக்கூடத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவிகளில் 4 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள கயாரிபுரா நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் பள்ளி மாணவிகளுக்கு டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவிகளில் 4 பேருக்கு திடீரென மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள் 4 பேரும் தற்போது நலமாக இருப்பதாகவும், அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் எதுவும் சாப்பிடாததால் மயக்கமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com