நவி மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து:


நவி மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து:
x
தினத்தந்தி 27 July 2024 12:15 PM IST (Updated: 27 July 2024 12:45 PM IST)
t-max-icont-min-icon

கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மும்பை,

மராட்டிய மாநிலம் நவி மும்பையின் ஷாபாஸ் கிராமத்தில் இன்று அதிகாலையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விபத்து குறித்து நவி மும்பை தீயணைப்புத்துறையின் துணை அதிகாரி கூறுகையில், "எங்களுக்கு அதிகாலை 4.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. அவர்களையும் மீட்பதற்கான பணிகள் நடந்து வருகின்றது" என்றார்.

1 More update

Next Story