

நாசிக்,
மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் சந்த்கிரி என்ற பகுதியில் வசித்து வந்த சிறுமி ஷாலினி ஹண்ட்கே (வயது 4). தனது தாயாரிடம் சாப்பிட ஏதேனும் பண்டம் தரும்படி கேட்டு இருக்கிறாள். அதற்கு சிறுமியிடம் அருகிலுள்ள கடைக்கு சென்று பண்டம் வாங்கி கொள் என கூறி பத்து ரூபாய் நாணயத்தினை அவர் கொடுத்துள்ளார்.
அதனை வாங்கி கொண்ட சிறுமி நாணயத்தினை வைத்து விளையாடி இருக்கிறாள். தற்செயலாக அந்த நாணயத்தினை அவள் விழுங்கியுள்ளாள்.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் உயர்தர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி மரணம் அடைந்து விட்டாள்.