

திருவனந்தபுரம்,
கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் (வயது 54) கற்பழித்தாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
40 வயது நிறைந்த கன்னியாஸ்திரி தெரிவித்துள்ள புகாரில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 13 முறை தன்னை பேராயர் கற்பழித்து உள்ளார் என தெரிவித்துள்ளார்.
பேராயரை கைது செய்யும்படி மாநிலத்தில் தொடர்ந்து போராட்டம் வலுத்தது. இதனை அடுத்து கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ மூலக்கல் நேரில் ஆஜரானார்.
இதற்கிடையே, தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று பிராங்கோ மூலக்கலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அவரை கொச்சி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், கோட்டயம் நீதிமன்றத்தில் பேராயர் மூலக்கல் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. அதன்பின் பிராங்கோ மூலக்கலை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள 2 நாட்கள் அனுமதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி பிராங்கோ செப்டம்பர் 24ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்படுவார்.