தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி

உடுப்பியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி செய்த சைபர் கிரைம் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி
Published on

மங்களூரு:-

உடுப்பியை சேர்ந்தவர் அனுஷ் ரவிசங்கர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுஷ் ரவிசங்கரின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதனை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி உள்ளார். இதனை அனுஷ் ரவிசங்கரும் நம்பி உள்ளார். பின்னர் அவர், அந்த நபருக்கு வங்கி விவரங்களை அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.75 ஆயிரத்தை அனுஷ் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், நீண்ட நாள் ஆகியும் பணம் இரட்டிப்பாகி கிடைக்கவில்லை. இதனால் அனுஷ், அந்த நபருக்கு தொடர்புகொண்டார். அப்போது அந்த நபரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், யாரோ மர்மநபர் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.75 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் உடுப்ப சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com