திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்தில் விரைவாக தரிசனம்

திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 76 லட்சம் கிடைத்தது.
திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்தில் விரைவாக தரிசனம்
Published on: 

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா காலங்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.

ரூ.3 கோடியே 76 லட்சம்

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 74 ஆயிரத்து 239 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 28 ஆயிரத்து 313 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 76 லட்சம் கிடைத்தது.

அன்று 3 லட்சத்து 89 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 1 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. அஸ்வினி மருத்துவம னையில் 2 ஆயிரத்து 708 பக்தர்களுக்கு மருத்துவச் சேவை அளிக்கப்பட்டது.

விரைவாக தரிசனம்

நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 19 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 6 முதல் 8 மணி நேரம் ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X