ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு

ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு
Published on

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் சாதாரண பக்தர்களுக்கு ஜனவரி 2022-ம் ஆண்டுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி மாதம் 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

இதர நாட்களில் தினமும் 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படும். இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் இலவச தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com