ஒரு மாதத்திற்கு இலவசம்: இந்தியாவில் 2 மாதங்களில் இணைய சேவை தொடங்கும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க்?


ஒரு மாதத்திற்கு இலவசம்: இந்தியாவில் 2 மாதங்களில் இணைய சேவை தொடங்கும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க்?
x

photo credit ANI

தினத்தந்தி 10 Jun 2025 10:27 AM IST (Updated: 10 Jun 2025 10:29 AM IST)
t-max-icont-min-icon

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை உலகின் பல்வேறு நாடுகளில் வழங்கி வருகிறது.

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்கி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் ஸ்டார்லிங்க் நிறுவனம் இணையசேவையை வழங்கி வருகிறது. செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை அளிக்கப்படுவதால், இந்த இணைய சேவை நகரம், கிராமம் என பாகுபாடு இன்றி அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீரான வேகத்தில் கிடைக்கும். இந்தியாவில் கால் பதிக்க இந்த நிறுவனம் அனுமதிக்காக காத்திருந்தது.

இந்த நிலையில்தான், ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு, இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குவதற்காக, தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து கடந்த வாரம் குளோபல் மொபைல் பெர்சனல் கம்யூனிகேஷன் பை சேட்டிலைட் உரிமம் கிடைத்தது. இதனால், இந்திய இணைய சந்தைகளில் ஸ்டார்லிங்க் நிறுவனம் கால் பதிப்பது உறுதியானது.

ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தனது சேவைகளைத் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டார்லிங்க் சேவையை பெற விரும்பும் பயனர்கள் முதலில் அதன் கருவியை ரூ. 33 ஆயிரத்திற்கு வாங்க வேண்டும் என்றும், மாதம் தோறும் ரூ.3 ஆயிரத்திற்கு அன்லிமிடெட்டு இணைய சேவையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டார்லிங்க் நிறுவனம் தனது அறிமுக திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு டிஷ் வாங்கும் வாடிக்கையாளருக்கும் ஒரு மாத இலவச சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

1 More update

Next Story