தூதரக அதிகாரிகளை தொடர்புகொள்ள இலவச தொலைபேசி எண் - மத்திய மந்திரியிடம் எச்.வசந்தகுமார் கோரிக்கை

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தூதரக அதிகாரிகளை தொடர்புகொள்ள இலவச தொலைபேசி எண் வேண்டும் என மத்திய மந்திரியிடம் எச்.வசந்தகுமார் கோரிக்கை விடுத்தார்.
தூதரக அதிகாரிகளை தொடர்புகொள்ள இலவச தொலைபேசி எண் - மத்திய மந்திரியிடம் எச்.வசந்தகுமார் கோரிக்கை
Published on

புதுடெல்லி,

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. எச்.வசந்தகுமார் நேற்று வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் சுப்பிரமணியத்தை சந்தித்து பேசினார். அப்போது, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அனைவரும், அவர்கள் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், அவர்களை சுலபமாக தொடர்பு கொள்ளவும் 24 மணி நேர இலவச தொலைபேசி சேவை எண்ணுடன் அனைத்து இந்திய தூதரக அதிகாரிகளையும் தொடர்புகொள்ள ஏதுவாக அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் அவர், இந்திய கடலோர காவல் படையின் தலைவர் நடராஜனை சந்தித்து கன்னியாகுமரியில் கடலோர காவல் படையில் தொழில்நுட்பம் மிக்க ஒரு அலுவலகம் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் புயல் மற்றும் இயற்கை சீற்றம் மூலம் பாதிக்கப்பட்டு வரும் நமது மீனவர்களை மிக விரைவில் காப்பாற்றி, அவர்களது படகுகளையும் விரைந்து மீட்க துரிதமாக செயல்படலாம் என கோரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com