

புதுடெல்லி,
இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை போட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின் பலன்களை பயன்படுத்துமாறு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
இதுகுறித்து மத்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் கூறுகையில், 'தடையற்ற ஒப்பந்தங்கள் மூலம் 70 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி கொண்ட உலக சந்தையை இந்தியா பயன்படுத்தும் வாய்ப்பு பெற்று இருக்கிறது. இது ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகின்றன' என்றார்.
மேலும் அவர் கூறும்போது, 'எனவே இந்திய ஏற்றுமதியாளர்கள் தடையற்ற ஒப்பந்தம் போடப்பட்டுள்ள பங்காளர் நாடுகளில் தங்கள் துறை சார்ந்த வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்காக சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்பது, உலகளாவிய வினியோக சங்கிலிகளை உருவாக்குவது, எல்லை தாண்டிய ஆன்லைன் வர்த்தக தளங்களை உருவாக்க வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார்.