ரக்‌ஷா பந்தன் தினத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் - ராஜஸ்தானில் அறிவிப்பு

ரக்‌ஷா பந்தன் அன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
ரக்‌ஷா பந்தன் தினத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் - ராஜஸ்தானில் அறிவிப்பு
Published on

ஜெய்ப்பூர்,

வட இந்திய மாநிலங்களில் சகோதர-சகோதரி பந்தத்தை சிறப்பிக்கும் வகையில் ராக்கி அல்லது ரக்ஷா பந்தன் என்ற தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி விடுவது வழக்கமாகும். அதே போல் சகோதர, சகோதரிகள் தங்களுக்குள் பரிசுப் பொருட்களையும் வழங்கி இந்த தினத்தை கொண்டாடுகின்றனர்.

இந்த ஆண்டு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராஜஸ்தான் அரசு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில், ரக்ஷா பந்தன் அன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் சாலை மார்க்கத்தில் பேருந்துகளில், ஏசி, வால்வோ மற்றும் அகில இந்திய அனுமதி பெற்ற பேருந்துகளை தவிர, மாநில எல்லைகளுக்குள் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com