பாலிவுட் திரை பிரபலங்களை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி

மும்பையில் இரவு 7.15 மணிக்கு இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க மற்றும் கலாசார விழாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்கிறார்.

பாலிவுட் திரை பிரபலங்களை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி
Published on

புனே,

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், அவருடைய மனைவி பிரிகித்தே மேக்ரான் இருவரும் மும்பையில் பாலிவுட் திரை பிரபலங்களை இன்று சந்தித்து பேசினர். அவர்கள் நடிகர்கள் அனில் கபூர், மனோஜ் பாஜ்பாயி, நடிகைகள் ரிச்சா சத்தா மற்றும் சப்னா ஆஸ்மி ஆகியோரை சந்தித்ததுடன், அவர்களுடன் ஒன்றாக புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

இந்த சந்திப்பில், திரைப்பட இயக்குநர் ஜோயா அக்தர், கிராமி விருது வென்ற இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Also Read
நிதிநிலை அறிக்கையால் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மக்களின் அமோக ஆதரவு கிடைக்கும்: செல்வப்பெருந்தகை

பாலிவுட் திரை பிரபலங்களை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்த பயணத்தில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது, மண்டல மற்றும் உலகளாவிய விசயங்களில் பரஸ்பர நலன், இந்தோ-பசிபிக்கில் ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இரு தலைவர்களும் பார்வைகளை பரிமாறி கொண்டனர்.

இரவு 7.15 மணிக்கு மும்பை ‘கேட்வே ஆஃப் இந்தியா’வில் நடைபெறும் இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க மற்றும் கலாசார விழாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்கிறார். மும்பை நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மேக்ரான் நாளை டெல்லி செல்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com