

மும்பை,
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மராட்டியத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது. இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் நேற்றைய பாதிப்பில் இருந்து இன்று சற்று குறைந்துள்ளது.
இதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 48 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 43 லட்சத்து 43 ஆயிரத்து 727 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 74 ஆயிரத்து 770 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 71 ஆயிரத்து 736 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 36,01,796 ஆக அதிகரித்துள்ளது.
மராட்டியத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரேநாளில் 524 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது.