எதிரியாக மாறிய நண்பர்! மம்தாவிற்கு எதிராக பா.ஜனதாவில் புதியதாக இணைந்த முகுல் ராய் சரமாரி குற்றச்சாட்டு

திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த முகுல் ராய் மம்தா பானர்ஜிக்கு எதிராக சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உள்ளார்.
எதிரியாக மாறிய நண்பர்! மம்தாவிற்கு எதிராக பா.ஜனதாவில் புதியதாக இணைந்த முகுல் ராய் சரமாரி குற்றச்சாட்டு
Published on

கொல்கத்தா,

பாரதீய ஜனதாவில் இணைந்து முதல் முறையாக பொது கூட்டத்தில் பேசிய முகுல் ராய், நெருங்கிய நண்பராக விழங்கிய மம்தாவை கடுமையாக சாடிஉள்ளார். மோசமான நிலைக்கே பலவற்றை மம்தா பானர்ஜி மாற்றி உள்ளார், அவருடைய மாற்றங்கள் பொதுமக்களுக்கு பிரச்சனையையும், வலியையுமே கொடுத்து உள்ளது என சாடி உள்ளார் முகுல் ராய்.

பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் முகுல் ராய் பேசுகையில், கொசுவினால் நோய்கள் பரவி வருகிறது, டெங்கு கொசுவினால் மக்கள் உயிரிழந்து வருகிறார்கள், ஆனால் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சினிமா நடிகர்களுடன் விழாக்களை கொண்டாடி வருகிறார். மக்கள் உயிரிழக்கும் போது அவர் கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட திருவிழாவை கொண்டாடி வருகிறார். தன்னுடைய கட்சிக்காரர்களுடன் வெளிநாடு செல்கிறார், ஆனால் இதுவரையில் எந்தஒரு தொழில் துறையும் மேற்கு வங்காளம் வரவில்லை என்றார்.

திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் இருந்தவர் முகுல் ராய், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதே பா.ஜனதாவுடன் அதிகம் நெருக்கம் காட்டினார். இதனையடுத்து அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். இதனையடுத்து வெளியேறிய முகுல் ராய், பாரதீய ஜனதாவில் இணைந்தார். மேற்கு வங்காளத்தில் மாற்றம் தேவையானது. மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா 2019-ம் ஆண்டு ஆட்சிக்கு வரும். மேற்கு வங்காளத்தில் துர்கா மற்றும் லட்சுமி பூஜைகளுக்கு தடை விதிக்கப்பட்டு விட்டது, மம்தா பானர்ஜி சிறுபான்மையினர் அரசியலில் ஈடுபட்டு உள்ளார். மேற்கு வங்காளத்தில் எதிர்க்கட்சிகளை நசுக்க சிஐடி மற்றும் போலீஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com