கச்சா எண்ணெய் முதல் மொபைல் போன் வரை ஒரே ஆண்டில் ரூ.75 லட்சம் கோடிக்கு இறக்குமதி

இந்தியா உலக அளவில் 4-வது பெரிய இறக்குமதி சந்தையாக உருவெடுத்துள்ளது.
கச்சா எண்ணெய் முதல் மொபைல் போன் வரை ஒரே ஆண்டில் ரூ.75 லட்சம் கோடிக்கு இறக்குமதி
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அதே வேளையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவும் ஆண்டுக்கு ஆண்டு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த இறக்கு மதி மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவாக 776 பில்லி யன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.75 லட் சம் கோடி) எட்டியுள்ளது. நாட்டின் அத்தியாவசியத் தேவைக ளான கச்சா எண்ணெய், தங்கம் முதல் அன்றாடப் பயன் பாட்டு மின்னணு சாதனங்கள், உரங்கள் மற்றும் மருந்து மூலப்பொருட்கள் வரை பலவற்றுக்கும் இந்தியா இன்னமும் வெளிநாடுகளையே பெரிதும் நம்பியிருக்கும் அதிர்ச்சித் தக வல் புள்ளிவிவரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதிப் பட்டியலில் வழக்கம் போல கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களே சிம்மாசனம் போட்டு முதலிடத்தில் அமர்ந்துள்ளன. கடந்த 2013-14 நிதியாண்டில் 165 பில்லியன் டாலராக இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி, 2025-26 நிதியாண்டில் 174 பில்லியன் டாலராக (சுமார் ரூ.16 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது 5 சதவீத வளர்ச்சியாகும். நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி யில் கச்சா எண்ணெயின் பங்கு மட்டுமே சிங்கம் போல 17.3 சதவீதமாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட டுள்ள போதிலும், அதற்கான மின்னணு சாதனங்கள் இறக்கு மதி அசுர வேகத்தில், அதாவது இரண்டு மடங்கு உயர்ந்துள் ளது. 2013-14-ல் 73 பில்லியன் டாலராக இருந்த மின்னணு பொருட்களின் இறக்குமதி, கடந்த நிதியாண்டில் 115 சதவீதம் எகிறி 156 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது. குறிப்பாக, செல்போன்கள் மட்டும் ரூ.72 ஆயிரம் கோடிக்கும், எலக்ட்ரா னிக் சிப்கள் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் இறக்குமதி செய்யப் பட்டுள்ளன. இதர மின்னணு உதிரிபாகங்களின் இறக்குமதி யாரும் எதிர்பாராத விதமாக 233 சதவீதம், 36-ல் இருந்து 119 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அத்தியாவசியத் தேவைகளான உணவுப் பொருட் கள், விவசாய உரங்கள், மருந்து தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்கள் போன்றவற்றுக்குக் கூட வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பது நல்லதல்ல என்று பொருளாதார வல்லுநர் கள் எச்சரிக்கின்றனர். இந்த மிதமிஞ்சிய இறக்குமதி சார்பு நிலை, இந்தியாவின் 'வர்த்தக பற்றாக்குறையையும், சர்வதேச செலுத்தல் சமநிலை அழுத்தத்தையும் கவலையளிக்கும் வகையில் அதிகரிக்கச் செய்யும் என்று அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

சர்வதேச அளவில் 2024-ம் ஆண்டு கணக்கீட்டின்படி, உலகி லேயே மிக அதிகமாக பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 13.8 சதவீதத்துடன் அமெரிக்கா முதலி டத்திலும், சீனா (10.7 சதவீதம்) இரண்டாம் இடத்திலும், ஜெர் மனி (5.8 சதவீதம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இவற் றுக்கு அடுத்தபடியாக 5.7 சதவீதப் பங்குடன் இந்தியா உலக அளவில் 4-வது பெரிய இறக்குமதி சந்தையாக உருவெடுத் துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com