

தருமபுரி,
காஷ்மீரில் ஆர்.எஸ். புரா செக்டரில், எல்லை பாதுகாப்பு படையின் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். அத்துடன் சரமாரியாக குண்டுகளையும் வீசினர். சிறிய ரக பீரங்கி தாக்குதலும் நடந்தது.12-க்கும் மேற்பட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையின் நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய தரப்பிலும் எல்லை பாதுகாப்பு படையினரால் சரியான பதிலடி கொடுக்கப்பட்டது.பாகிஸ்தான் தாக்குதலை எதிர்த்து வீரமுடன் சண்டையிட்ட எல்லை பாதுகாப்பு படையின் தலைமைக்காவலர், சுரேஷ் வீர மரணம் அடைந்தார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.
பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழக வீரர் சுரேஷின் உடல் இன்று காலை கோவை விமானநிலையம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து இருந்து சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் பண்டாரசெட்டிப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.பண்டாரசெட்டிப்பட்டியில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இறுதிச்சடங்குகளும் செய்யப்பட்டன. பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. #jammuandkashmir | #CeasefireViolation