

லக்னோ,
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் இணைந்த மகா கூட்டணியில் நிஷாத் கட்சியும் இணைந்திருந்தது. ஆனால் சமாஜ்வாடியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த கூட்டணியில் இருந்து நிஷாத் கட்சி வெளியேறியது. அந்த கட்சி பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக, நிஷாத் கட்சிக்கு அளிக்கப்பட்டு இருந்த தொகுதிகளுக்கு சமாஜ்வாடி வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி கோரக்பூர் தொகுதியில் ராம் புகல் நிஷாத்தும், கான்பூர் தொகுதிக்கு ராம் குமார் நிஷாத்தும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
நிஷாத் கட்சி விலகிய நிலையில், சமாஜ்வாடியின் வேட்பாளர்கள் இருவரும் நிஷாத் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.