மகனுக்கு வேலை கிடைக்காததால் விரக்தி: முதல்-மந்திரி கண்முன்னே தீக்குளிப்பு

மகனுக்கு வேலை கிடைக்காத விரக்தியில், முதல்-மந்திரியின் கண்முன்னே ஒருவர் தீக்குளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகனுக்கு வேலை கிடைக்காததால் விரக்தி: முதல்-மந்திரி கண்முன்னே தீக்குளிப்பு
Published on

சோனிபட்,

அரியானாவில் அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், மாநிலம் முழுவதும் யாத்திரை சென்று வருகிறார். ஜன ஆசீர்வாத யாத்திரை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை சோனிபட் மாவட்டத்தில் நடந்தது.

முதல்-மந்திரியின் யாத்திரை வாகனம் ரத்தனா கிராமத்தில் சென்றபோது, அந்த கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் சூடு தாங்காமல் அங்குமிங்கும் ஓடினார். முதல்-மந்திரி கண்முன்னே நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனே அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு ரோத்தக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வேலை கிடைக்கவில்லை. எனவேதான் இந்த செயலில் ஈடுபட்டேன் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com