

சென்னை,
பெட்ரோல், டீசல் ஏறக்குறைய ஒருவார காலமாக தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து ரூ.81.58 ஆகவும், டீசல் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.74.18 ஆகவும் அதிகரித்துள்ளன.
இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 78.52-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலையும் அதிகரித்து இருப்பது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.