மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

ஐதராபாத்தில் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்
Published on

ஐதராபாத்,

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டேருக்கு கெரேனா தடுப்பூசி பேடும் பணி தெடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி பேட்டுக்கெண்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி முதல் நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 630 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டு இணை நேயுள்ள 18 ஆயிரத்து 850 பேருக்கும் தடுப்பூசி பேடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுடன் சேர்த்து இதுவரை ஒட்டுமெத்தமாக கெரேனா தடுப்பூசி பேட்டுக்கெண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கேடியே 47 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 2-வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் முதல் நாளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மேடி கொரோனா தடுப்பூசி பேட்டுக்கெண்டார்.

அவரைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித் ஷா, வெளியுறவுத் துறை மந்திரி ஜெய் சங்கர், ஒடிஷா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டேரும் முதல் நாளில் தடுப்பூசி பேட்டுக்கெண்டக் கொண்டனர்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com