'இந்தியா அல்ல பாரத்' - பிரதமர் மோடி முன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை...!

ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி இருக்கைக்கு முன்பு இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என குறிப்பிடப்பட்டுள்ள பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது
Image Courtesy: ANI 
Image Courtesy: ANI 
Published on

டெல்லி,

உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி 20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வருகிறது. இதனிடையே, ஜி 20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை ஜி 20 மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் பாரத் மண்டபம் வந்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். அதன் பின்னர் அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றனர். அதன் பின்னர் மாநாடு தொடங்கியது. 

இந்நிலையில் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளும் உலக தலைவர்களின் நாடுகளை குறிக்கும் வகையில் பெயர்பலகை வைக்கப்படும். அப்படி வைக்கப்பட்ட பெயர்பலகையில் பிரதமர் நரேந்திர மோடியின் முன் வைக்கப்பட்டுள்ள பலகையில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com