

பெங்களூரு,
இறுதிக்கட்டத்தை ககன்யான் திட்டம் எட்டி உள்ளது.
இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், வரும் 2027ல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்வெளியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பான பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
இஸ்ரோ மற்றும் இந்திய விமானப்படையின் ஏரோஸ்பேஸ் மருத்துவ நிறுவனம், கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த புரோட்டோபிளானட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் இணைந்து இத்திட்டத்தை வடிவமைத்துள்ளன.
இந்தநிலையில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
முதல் ஆளில்லா பயணத்திற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விண்வெளி வீரர்கள் அமரும் பகுதி தயாரிப்பு நிறைவு பெற்றுள்ளது. அக்டோபர் பிற்பகுதி முதல் நவம்பர் தொடக்கத்திற்குள் என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் ஏவப்படலாம் . நான்கு விண்வெளி வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.