

புதுடெல்லி,
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த செப்டம்பர் மாதம் 28ந்தேதி நள்ளிரவு ஊடுருவி மறுநாள் காலை 4.30 மணிவரை பயங்கரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் துவம்சம் செய்யப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்தது.
இந்நிலையில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்கில் பங்குபெற மொகித் சுரிக்கு சவுர்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பங்குபெற்ற மற்ற 5 ராணுவ வீரர்களுக்கும் கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற துணை ராணுவ வீரர்கள் சிலருக்கு யுத் சேவா பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.