காசு வைத்து சூதாட்டம்; 7 பேர் கைது

சிந்தாமணியில் காசு வைத்து சூதாடிய 7 பேரை போலீசா கைது செய்தனா. அவாகளிடம் இருந்து ரூ.30 ஆயிரம், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனா.
காசு வைத்து சூதாட்டம்; 7 பேர் கைது
Published on

சிந்தாமணி

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா சொக்கனஹள்ளி கிராமத்தில் உள்ள மலை அடிவாரத்தில் சிலர் காசு வைத்து சூதாடுவதாக சிந்தாமணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சொக்கனஹள்ளி கிராமத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 7 பேர் காசு வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே சுதாரித்து கொண்ட போலீசார், தப்பியோட முயன்ற 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், படாளம்மா கோவில் பகுதியை சேர்ந்த குபேர் சிங், கித்வாய் நகரை சேர்ந்த ஜபியுல்லா, ராஜேஷ், பிரபாகர், கஜேந்திரா, நாகராஜ், ஆனந்த் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் ரொக்கம், 3 மோட்டார் சைக்கிள்கள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சிந்தாமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com