காந்தி ஜெயந்தி: புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் மூடல்

உத்தரவை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது கலால் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
காந்தி ஜெயந்தி: புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் மூடல்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் இயங்கி வரும் மதுபானக் கடைகள், சாராயக் கடை, கள்ளுக்கடை போன்றவை வழக்கமாக முக்கிய நாட்களில் மூடப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி, மிலாடி நபி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம், உழைப்பாளர்கள் தினம் உள்ளிட்ட நாட்களில் மதுபானக் கடைகள் மூடப்படும்.

அந்த வகையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் 2-ந்தேதி(நாளை) அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என கலால் துறை அறிவித்துள்ளது. உத்தரவை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது கலால் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com