விநாயகர் சிலை கரைப்பின்போது தண்ணீரில் மூழ்கி 4 பேர் பலி

மாயமானவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
மும்பை,
நாடு முழுவதும் கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியின் இறுதி நாளான நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. குறிப்பாக, மராட்டிய மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது தண்ணீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் மாயமாகினர்.
அம்மாநிலத்தின் புனே, நந்தல் தானே ஆகிய மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் ஆறு, ஏரி, குளம், கால்வாய்களில் கரைக்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் தண்ணீர் அடித்து செல்லப்பட்டு மாயமாகினர். மாயமானவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story






