முழுவதும் வெங்காயம் கொண்டு உருவான விநாயகர்; பூஜை செய்து வழிபட்ட மக்கள்

மராட்டியத்தில் 60 கிலோ எடை கொண்ட வெங்காயம் கொண்டு உருவான விநாயகரை மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
முழுவதும் வெங்காயம் கொண்டு உருவான விநாயகர்; பூஜை செய்து வழிபட்ட மக்கள்
Published on

புனே,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது, விநாயகர் சிலைகளை வாங்கி வீட்டில் வைத்து மக்கள் வழிபாடு செய்வது வழக்கம். இதனை தொடர்ந்து சில நாட்களில் சிலையை நீர்நிலைகளில் பாதுகாப்புடன் கரைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு அதிக உற்சாகத்துடன் கொண்டாடினர்.

வடமாநிலங்களில் விநாயகர் வழிபாடு பிரசித்தி பெற்றது. விநாயகரை பல வடிவங்களில் உருவாக்கி வழிபடும் வழக்கமும் உள்ளது. இதன்படி, மராட்டியத்தின் வாசிம் நகரில் கமர்காவன் பகுதியில் ஜெய் பவானி கணேஷ் மண்டலில் 60 கிலோ எடை கொண்ட பெரிய வெங்காயம் கொண்ட மூட்டைகளை வைத்து விநாயகர் வடிவம் கொண்ட சிலையை மக்கள் உருவாக்கினர்.

அதன்பின்னர் அதற்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். இந்த முறை விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்குடனும், இதுபோன்ற வழிபாடுகளில் மக்கள் ஈடுபடுகின்றனர்.

இந்த ஆண்டு ஆர்ஆர்ஆர் உருவத்தில் விநாயகர் சிலைகளும், புஷ்பா படத்தில் வரும் அல்லு அர்ஜூன் புஷ்பா விநாயகரும், நடிகர் ரஜினிகாந்தின் அடுத்து வரவுள்ள ஜெயிலர் படத்தின் வடிவிலான விநாயகர் சிலைகளும் இந்த ஆண்டு புது வரவாக விற்பனைக்கு வந்து அசத்தின.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com