விநாயகர் சிலை ஊர்வலம் எதிரொலி: சிக்கமகளூருவில் இன்று மதுபானம் விற்க தடை

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு சிக்கமகளூருவில் இன்று மதுபானம் விற்க தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
விநாயகர் சிலை ஊர்வலம் எதிரொலி: சிக்கமகளூருவில் இன்று மதுபானம் விற்க தடை
Published on

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு போலராமேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி நகரசபை சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அங்கு தினமும் சிறப்பு பூஜைகளும், விசேஷ அபிஷேகங்களும் நடந்து வந்தது.

இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) போலராமேஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை பசவனஹள்ளியில் உள்ள குளத்தில் கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாளை சிக்கமகளூரு நகரில் இந்திரா காந்தி சாலை, எம்.ஜி.ரோடு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், சிக்கமகளூரு நகரில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மதுபானங்கள் விற்க தடை விதித்து கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com