ஒடிசாவில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - சிறுவன் உள்பட 6 பேர் கைது

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகார் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - சிறுவன் உள்பட 6 பேர் கைது
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள பாதம்படி காவல்நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரில், தசரா பண்டிகை சமயத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தனது ஆண் நண்பருடன் புரிகாட் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றதாகவும், அந்த உணவகத்தின் உரிமையாளருடன் சேர்ந்து தனது ஆண் நண்பர் தன்னை தவறான முறையில் வீடியோ எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அந்த வீடியோவை காட்டி தனது ஆண் நண்பர், உணவக உரிமையாளர், ஒரு சிறுவன் மற்றும் 3 பேர் என மொத்தம் 6 பேர் பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 6 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com