இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம்: அரசு ஊழியர் உள்பட 8 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த அரசு ஊழியர் உள்பட 8 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம்: அரசு ஊழியர் உள்பட 8 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
Published on

பெங்களூரு: பெங்களூரு கொத்தனூர் பகுதியில் 20 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு இளம்பெண் சிறுமியாக இருந்தபோது வித்யாரண்யபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டபெட்டஹள்ளி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் தங்கி படித்து வந்தார். அப்போது இளம்பெண்ணை சைமன் பீட்டர் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி இளம்பெண் சாமுவேல் என்பவரிடம் தெரிவித்தார் அவர், உதவுவது போல நடித்து இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

மேலும் தொட்டபெல்லாவை சேர்ந்த காண்டிராக்டரான நாகேஷ், பெஞ்சமின், யாகூப் ஜான்சன், நவீன் குமார், பால், அரசு ஊழியரான லோகநாதன் ஆகியோரம் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த பலாத்கார சம்பவம் 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்துள்ளது. இதன் பின்னர் இளம்பெண்ணுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் சிகிச்சையில் இருந்த இளம்பெண் தற்போது குணமடைந்த நிலையில் 8 பேர் மீதும் கிழக்கு மண்டல மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் 8 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com